ரெண்டு பேரா மாமி - 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு தொடர்பு!


ரெண்டு பேரா மாமி

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி போலீஸார் விசாரணையில் 10 ஆண்டுகால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்று்ம அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் மதுரை பல்கலைக்கழக உயரதிகாரிகளின் படுக்கைக்கு பெண்களை சப்ளை செய்ய 4 மாணவிகளிடம் பேசிய ஆடியோ உரையாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை அடுத்து நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்தது. இதையடுத்து போலீஸார் அவரை திங்கள்கிழமை கைது செய்தனர்.

   அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்தில் விசாரணைக்கு பிறகு விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா தேவி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 12 நாட்கள், அதாவது வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.         இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அருப்புக்கோட்டை நகர போலீஸாரிடம் இருந்த இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ. டி.எஸ்.பி. ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை கண்காணிப்பாளர் முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டனர். இருவரும் நேற்று அதிரடி விசாரணை தொடங்கினர்.
   இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் 2008-ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டையில் கல்லூரியில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார். அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக அவர் சென்று வந்தபோது தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
Previous
Next Post »